Saturday 15 November 2014

valaipathivu14

Page text, Blog title, Blog description, Post title, என்ற options மூலம், வலைப்பூவின் தலைப்பு, பதிவின் தலைப்பு, பதிவின் உள்ளடக்கம், பக்கப்பட்டிகளின் (sidebar) தலைப்பு, என எல்லா விதமான எழுத்துக்களின் அளவு, கலர், ஆங்கில எழுத்துக்களின் வடிவம் என மாற்றங்கள் செய்யலாம்.


மேலும் நாம்வலைப்பூவில் எந்த பகுதியை மாற்றம் செய்கிறோம் என்பதை ஒரு கட்டம் இட்டு காட்டும். அதாவது நான் gadgets என்பதை தேர்வு செய்துள்ளேன். அதனால் முன்னோட்டப் பகுதியில் உள்ள மாதிரி வலைப்பூவில் மாற்றம் செய்ய வேண்டிய பகுதிகள் கட்டமிட்டு காட்டுகிறது என்பதை கீழ்க்கண்ட படத்தின் மூலம் அறியலாம். இந்த கட்டத்தால் நாம் செய்ய வேண்டிய மாற்றங்களை தவறில்லாமல் செய்யலாம்.
நண்பர்களே, Blogger template designer பற்றிய விளக்கங்கள் இந்த பாகத்துடன் முடிகிறது. உங்கள் தளத்தில் ஒவ்வொன்றாக, பொறுமையாக பயன்படுத்தி பாருங்கள். எளிமையாக இருக்கும். நீங்களே உங்கள் வலைதளத்தை அழகாக அமைக்கலாம்...

இனி, அடுத்த பாகத்தில் நாம் பார்க்க இருப்பது Layout பற்றி...

No comments:

Post a Comment