Saturday 15 November 2014

valaipathivu11

இனி பதிவை எப்படி வெளியிடுவது என பார்ப்போமா?


இத்தொடருக்காக பதிவை வெளியிடுவதை விளக்க இணையப்பூங்கா தளத்தில் ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதன் விளக்க படம் கீழே.

தலைப்பு, பதிவின் சாராம்சம், குறிச்சொற்கள் ஆகியவை சரியாக கொடுக்கப்பட்ட பின்னர் தலைப்பு கட்டத்திற்கு வலப்பக்கம் Publish என்பதை க்ளிக் செய்தால் பதிவு வெளியிடப்படும்.

பதிவை வெளியிடாமல் சேமித்து வைக்க விரும்பினால் Save என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

பதிவை வெளியிடும் முன் அந்த பதிவு வலைப்பூவில் எவ்வாறு தெரியும் என்பதை முன்னோட்டமாக பார்க்க விரும்பினால் Preview என்பதை க்ளிக் செய்யவும்,

பதிவு எழுதிய பக்கத்தை மூட விரும்பினால் Close என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அந்தப் பதிவை Publish - வெளியிட்டால் இணையப்பூங்கா தளத்தில் எவ்வாறு காட்டும் என்பதை கீழே படத்தில் பாருங்கள். நேரடியாக இணையப்பூங்கா தளத்தில் பார்க்க விரும்பினால் இங்கே க்ளிக்செய்யுங்கள்.

நண்பர்களே, பதிவை எழுதி வலைப்பூவில் எவ்வாறு வெளியிடுவது என பார்த்தோம். இந்த பத்தாவது தொடர் வரை நீங்கள் தொடர்ந்து வாசித்து அதன்படி செய்தால் உங்களாலும் புதிய வலைப்பூ துவங்கி பதிவுகளை வெளியிட முடியும். இந்த தொடர் இதோடு முடிந்து விடவில்லை. இன்னும் தொடர்ந்து எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே இத்தொடர் இன்னும் வளரும்.

No comments:

Post a Comment