Saturday 15 November 2014

valaipathivu13

இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer பற்றி பாப்போம்.
டெம்ப்ளேட் மாற்றங்களின் போது பொறுமை மிக அவசியம் நண்பர்களே, ஒவ்வொரு option-யும் தேர்வு செய்து Apply to blog கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து திட்டமிடுங்கள்.

Blogger டாஸ்போர்டில் template என்ற பகுதியில் customize என்பதை க்ளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு பக்கம் ஓபன் ஆகும். இவற்றை blogger template designer என சொல்லாம். இந்தப் பகுதியானது  நமது வலைப்பூவின் டெம்ப்ளேட்டின் உள் அமைப்புகளை மாற்றப் பயன்படுகிறது.


மேலே படத்தில் மூன்று பகுதிகளை குறிப்பிட்டு காட்டியுள்ளேன். மேலே இடது மூலையில் உள்ள பகுதி பிளாக்கில் தேவையான மாற்றங்களை செய்யக் கூடிய options உள்ளது.

மையத்தில் வட்டமிட்டு கட்டியுள்ள பகுதி மாற்றங்களை செய்த பின்னர் பிளாக்கில் எப்படி இருக்கும் என்பதை முன்னோட்டமாக காட்டும். இதில் நாம் செய்த மாற்றங்கள் சரிதானா என பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக மேலே வலது மூலையில் Apply to blog என்ற option உள்ளது. நாம் செய்த மாற்றங்கள் முழுமையாக திருப்தி அளித்தால் இந்த option-ஐ க்ளிக் செய்து உறுதி செய்யலாம்.


Blogger template designer பகுதியில் Template, Background, Adjust widths, layout, Advanced என ஐந்து வகை options உள்ளது. இனி ஒவ்வொன்றாக விளக்கமாக பார்ப்போம்.

TEMPLATES:
இதில், Simple, Dynamic views, Picture window, Awesome inc, Watermark, Ethereal, Travel என்ற வகைகளில் சில templates உள்ளது. இவற்றில் simple என்ற டெம்ப்ளேட்டை நாம் தேர்வு செய்துள்ளோம்.

நீங்கள் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை தேர்வு செய்து அவற்றை முன்னோட்டமாக பார்த்த பின்னர் தேர்வு செய்யவும். மேலும் டெம்ப்ளேட்டை
தேர்வு செய்ய உதவியாக ஒவ்வொரு டேம்ப்ளேட்டுக்கும் கீழே, உதவியாக நிறைய டெம்ப்ளேட் வடிவங்கள் உள்ளன. அவற்றையும் முன்னோட்டம் பார்த்து தேர்வு செய்யுங்கள். 

நான் simple template-க்கு கீழே இரண்டாவதாக உள்ள வெளீர் நீல கலர் உள்ள வடிவத்தை தேர்வு செய்துள்ளேன். ஒவ்வொரு கலருக்கும், எழுத்து வடிவம் சற்று மாறும். உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்யுங்கள்.

BACKGROUND:
சிலர் தங்களின் வலைப்பூவின் பின்புலத்தில் அழகாக படங்களை இணைத்திருப்பார்கள். நாம் அவ்வாறு படங்களை எப்படி இணைப்பது என இங்கு பார்ப்போம். கீழே படத்தில் background image என்பதை கிளிக் செய்தால் புதிதாக ஒரு பக்கம் ஓபன் ஆகும், அங்கு நிறைய படங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் நமக்கு பிடித்தமான படத்தை தேர்வு செய்யலாம். இதனால் டெம்ப்ளேட் பார்க்க மிக கவர்ச்சியாக அழகாக இருக்கும்.  Blogger படங்கள் தேவையில்லையெனில் நமக்கு பிடித்தமான படத்தை கம்ப்யூட்டரில் இருந்தும் (Upload) தேர்வு செய்யலாம். கீழே படத்தில் பாருங்கள்.

மேலே ப்ளாக்கரில் கொடுத்துள்ள business என்ற வகையில் இருந்து ஐந்தாவது படத்தைத் தேர்வு செய்துள்ளேன். அதன் முன்னோட்டம் தான் வலைப்பூவின் பின்புலத்தில் காட்டுகிறது. இதோ கீழே உள்ள படத்தில் நமது வலைப்பூ எவ்வாறு தோற்றம் அளிக்கிறது எ

No comments:

Post a Comment