Saturday 15 November 2014

valaipathivu 18

இத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம். 


layout-இல் இருக்கும் ஒவ்வொரு gadget-களையும் நமக்கு விருப்பமான இடத்தில் வைக்க முடியும்.
மேலே உள்ள layout படத்தில், வலப்பக்கத்தில் followers என்பதை மேலே உள்ள pages-க்கு கீழே வைக்க விரும்புகிறேன். எவ்வாறு followers gadget-ஐ மேலே கொண்டு செல்வது?
1. நகர்த்த வேண்டிய gadget-ஐ மவுஸ் மூலம் அழுத்தி க்ளிக் செய்ய வேண்டும்.

2. க்ளிக் செய்ததை எடுக்காமல் மவுஸை மேல் நோக்கி இழுத்தால், மவுஸ்-உடன் followers gadget-ம் நகரும். 
 கீழே உள்ள படத்தில் வலைப்பூவில் பதிவுக்கு வலப் பக்கம் folowers widget உள்ளது.




3. page gadget-க்கு கீழே கொண்டு சென்று இரண்டு, மூன்று வினாடிகள் வைத்தால் புதிய gadget வைக்க ஒரு கட்டம் ஓபன் ஆகும். அந்த கட்டத்தில் நகர்த்திய followers gadget-ஐ வைக்கலாம்.பிறகு save arrangement க்ளிக் செய்து save செய்ய வேண்டும்.



கீழே உள்ள படத்தில் followers gadget வேறு பக்கம் நகர்த்தி வைத்துள்ளேன்.

இது போல உங்களுக்கு தேவையான இடங்களில் gadget-ஐ நகர்த்தி வைக்கலாம்.

No comments:

Post a Comment