ஒரு வலைப்பூ துவங்கி settings அமைப்பது பற்றியும், பதிவு எழுதுவது பற்றியும் கடந்த பாகங்களில் பார்த்தோம். இனி பதிவு எழுதக்கூடிய பக்கத்தில்
உள்ள சில icons பற்றியும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது எனவும் பார்ப்போம்.
உள்ள சில icons பற்றியும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது எனவும் பார்ப்போம்.
![]() |
பதிவை மெருகூட்ட பயன்படும் வசதிகள் |
கடந்த பாகத்தில் அம்புக்குறி குறித்த icons பற்றி பார்த்தோம். இந்த பதிவில் இவற்றில் அம்புக்குறி இல்லாத icons பற்றி பார்ப்போம்.

B என்பது வார்த்தை/எழுத்துக்களை பெரிதாக்கி காட்ட பயன்படுகிறது.
I என்பது வார்த்தை/எழுத்துக்களை சாய்வாக காட்டப் பயன்படுகிறது.
U என்பது வார்த்தை/எழுத்துக்களில் அடிக்கோடு இட பயன்படுகிறது.
அடுத்து லிங்க் என்பது என்ன?
ஒரு வார்த்தை, வாக்கியத்திற்கு வேறு வலைதள/வலைப்பூ முகவரியை இணைப்பாக கொடுக்க இந்த லிங்க் என்ற option பயன்படுகிறது. உதாரணமாக இங்கு "இணையப்பூங்கா" என எனது இன்னொரு வலைப்பூ தலைப்பை எழுதியுள்ளேன். இப்பொழுது நீங்கள் அந்த இணையப்பூங்கா தளத்திற்கு செல்ல அந்த வார்த்தையில் இணையப்பூங்கா வலைப்பூவின் முகவரியை இணைப்பாக கொடுத்தால் தான் அங்கு செல்ல முடியும். இப்போது இணையப்பூங்கா என்பதை க்ளிக் செய்யுங்கள். அந்த வலைப்பக்கம் புதிய விண்டோவில் திறக்கிறதா? ஆம், லிங்க் option பயன்படுத்தியுள்ளதால் ஓபன் ஆகிறது.
லிங்க் தர என்ன செய்ய வேண்டும்?
1. லிங்க் தர வேண்டிய வார்த்தை/ வாக்கியத்தை மவுஸ் மூலம் தேர்வு செய்து கொள்ளுங்கள். வார்த்தை/வாக்கியத்திற்கு இறுதியில் மவுஸ் பாயிண்ட்டை வைத்து இடது பட்டனை அழுத்திக் கொண்டே அந்த வார்த்தை/வாக்கியத்தின் முதல் எழுத்து வரை கொண்டு சென்றால் அந்த வார்த்தை/வாக்கியம் நீல பின்புல வண்ணத்துடன் காட்டும். அப்படியெனில் வார்த்தை/வாக்கியம் தேர்வு செய்தாயிற்று என அர்த்தம். பார்க்க படம் கீழே.
2. லிங்க் என்பதை க்ளிக் செய்தால் கீழ்க்கண்ட விண்டோ ஓபன் ஆகும்.
இந்த விண்டோவில் text to display என்ற கட்டத்தில் நாம் தேர்வு செய்த வார்த்தை/வாக்கியம் காட்டும்.
3. web address என்ற கட்டத்தில் நாம் பகிர வேண்டிய தளத்தின் முகவரியை கொடுக்கவும்.
4. open this link in a new window என்ற கட்டத்தை டிக் செய்தால் அந்த லிங்க் புதிய விண்டோவில் திறக்கும். டிக் செய்யாவிட்டால் அதே விண்டோவில் திறக்கும். இதனால் பழைய விண்டோ மறைந்து விடும். எனவே புதிய விண்டோவில் திறக்குமாறு டிக் மார்க் செய்யவும். பின்னர் கீழே உள்ள ok என்பதை அழுத்தினால் நமது வார்த்தை/வாக்கியத்திற்கு லிங்க் கிடைத்து விடும்.
அடுத்து பதிவு எழுதும் பக்கத்தில் கடைசியாக இருக்கும் ஐந்து icons பற்றி பாப்போம்.
மேலே படத்தில் முதலில் இருப்பது வரிசை எண்களை தரக் கூடியது.
இரண்டாவதாக இருப்பது வரிகளுக்கு முன் bullet - புள்ளி(dot) தரக் கூடியது. பார்க்க படம் கீழே
மூன்றாவதாக இருப்பது மேற்கோள் காட்டக் கூடியது. நாம் தேர்வு செய்துள்ள டெம்ப்ளேட்க்கு ஏற்றவாறு இவை காட்டும். மேலும் இந்த மேற்கோள் அமைக்க இணையதளத்தில் நிறைய டிப்ஸ் உள்ளது. அதில் ஒன்றை நான் எனது டெம்ப்ளேட்டில் அமைத்துள்ளேன். பார்க்க இந்த பாராவை.நான்காவதாக இருப்பது remove formating ஆகும். ஏதேனும் format-ஐ உதாரணமாக வரிசை எண்கள் கொடுத்து பின்னர் அவை தேவையில்லை எனில் இந்த வசதி
No comments:
Post a Comment